Reading Time: < 1 minute

சாஸ்கடூன் மாகாண சிறுவர் சீர்திருத்தம் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக் குத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சாஸ்கடூனில் 910 60ஆவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளியிலேயே, இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சீர்திருத்த பள்ளியில் இருந்த சக சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 23 வயதான இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.