Reading Time: < 1 minute

வடக்கு யோர்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறெண்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பேலிவியூ ஒழுங்கைக்கு அருகிலுள்ள லோவர்லீஃப் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்துள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.