Reading Time: < 1 minute

நேற்று இரவு றிச்மண்ட் ஹில் பகுதியில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து ஒன்று சம்பவித்ததாகவும், இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Yonge Street மற்றும் Jefferson Forest Drive பகுதியில் நேற்று இரவு 9:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின்போது வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், மூவர் உள்ளூர் மருத்துவமனையிலும், மேலும் இருவர் ரொரன்ரோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை அடுத்து குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.