Reading Time: < 1 minute

கனடாவில் காற்பந்து விளையாடியதன் பின்னர் ஒன்றுகூடியவர்கள் மீது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Tamil Business Directory

இட்டாபிகொக்கில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும் 40 முதல் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் மேலும் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.