Reading Time: < 1 minute

கனடாவின் கியூபக் மாகாணத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ் கியூபாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tamil Business Directory

இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

கியூபாவின் சாண்டா கிளாரா விமான நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மொன்றியலைச் சேர்ந்த 38 பயணிகள் இந்த விமானத்தில் பயணித்த நிறைய தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஒரு கியூப பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

பஸ்ஸும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் ஆறு பேர் சிறுவர்கள் எனவும் ஒருவரின் நிலைமை ஆபத்தானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து சம்பவத்தை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.