Reading Time: < 1 minute

கொள்ளையிடப்பட்ட 400 கிலோ தங்கம் நகைக் கடையொன்றில் உருக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

விமான நிலையத்திலிருந்து களவாடப்பட்ட 400 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தின் ஒரு பகுதி இவ்வாறு உருக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இவ்வாறு தங்கம் உருக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களுக்கும் தொடர்பு உண்டு என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வளவு தங்கம் இவ்வாறு நகைக் கடையில் உருக்கப்பட்டது என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.