Reading Time: < 1 minute

கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹொலிஸ் வீதி மற்றும் டெர்மினால் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை ஹாலிபெக்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போராட்ட இடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலை ஏற்க மறுத்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்திற்கான உரிமைகளை மதிக்கும் அதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன மக்களுக்கான நிதி உதவிகளை சர்வதேசம் முடக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.