Reading Time: < 1 minute

கனடிய வரி முகவர் நிறுவனத்தின் பெயரில் இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய வருமான முகவர் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படுவது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரி நிலுவை காணப்படுவதாகக் கூறி அதனை செலுத்துமாறு அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய முகவர் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படும் தகவல்கள் தொடர்பில் உறுதி செய்து கொள்ளாது பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.