Reading Time: < 1 minute

காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜை ஒருவர்; காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

காசாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை பதிவு செய்யும் நடவடி;ககைளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த பலஸ்தீன கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்.

மன்சூர் சௌமான் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தென் காசா பிராந்தியத்தின் நாசர் வைத்தியசாலை பகுதியில் சொளமானை இறுதியாக கண்டதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

சௌமான் கடத்திச் செல்லப்பட்டதாக நேரில் கண்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சௌமான் காணாமல் போன விவகாரம் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.