Reading Time: < 1 minute

ஜப்பானை உலுக்கிய, நில நடுக்கத்தில் கனடியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு கரை தீவுப்பகுதியில் 7.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது இதன் போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கனடியர்கள் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ இதுவரையில் தெரியவரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட கனடியர்கள் ஜப்பானுக்கான கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.