Reading Time: < 1 minute

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 33,000 வாகனங்களை அதன் ‘டிரான்ஸ்மிஷன் பார்க்’ அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Tamil Business Directory

வியாழக்கிழமை (ஜூலை 2, 2026) ஃபோர்ட் கனடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வாகனங்களை ஓட்டும்போது கியர் மாற்றுவதில் ஏற்படும் சில குறிப்பிட்ட சிக்கல்களால், வாகனத்தை ‘பார்க்’ (Park – P) மோடில் நிறுத்தும் தொழில்நுட்பக் கூறுகள் சேதமடையக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கோளாறு காரணமாக, வாகனம் ‘பார்க்’ மோடில் இருக்கும்போது அது பாதுகாப்பாக ஒரே இடத்தில் நிற்பதை டிரான்ஸ்மிஷன் அமைப்பால் உறுதி செய்ய முடியாமல் போகலாம். இதனால் வாகனம் தானாக நகர்ந்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இந்தத் குறைபாடு சரிசெய்யப்படும் வரை, வாகனத்தை நிறுத்தும்போது எப்போதும் ‘இலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்’கை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என ஃபோர்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தக் கோளாறினால் இதுவரை ஏதேனும் விபத்துக்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் ‘பவர்டிரெயின் கன்ட்ரோல் மாடியூல்’ மென்பொருளை ஃபோர்ட் மற்றும் லிங்கன் டீலர்கள் இலவசமாகப் புதுப்பித்து (Software update) தரப்படும், மேலும், வாகனத்தின் பார்க்கிங் லாக் அமைப்பைச் சோதித்து, ஏதேனும் பாகங்கள் சேதமடைந்திருந்தால் அவை முற்றிலும் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.