Reading Time: < 1 minute
Tamil Business Directory
மக்கள் என் மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்பது தமக்கு தெரியும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களின் போது தமக்கு ஆதரவு வழங்கிய அதே இளம் தலைமுறையினர் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் பெரும்பான்மை அரசாங்கத்தை நிறுவுவதற்கு உதவியவர்களே இன்று எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் எட்டு ஆண்டுகளின் வாடகை செலுத்துவதற்கு முடியாத நிலையில் வாழ்வதாகக் குறிப்பிடப்படுகின்றது. வாக்குறுதி அளித்து மக்களை தாம் ஏமாற்றியதில்லை என அவர் சுடுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கருத்துக் கணிப்பு ஒன்றில் பங்கேற்ற 70 வீதமானவர்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




