Reading Time: < 1 minute

கனடா ஒட்டோவாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

Tamil Business Directory

டொனால்ட் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல மாடிகளில் இருந்து இந்த சிறுவன் கீழே விழுந்து உளளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் 18 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.