Reading Time: < 1 minute

கனடாவில் ஒட்டோவா கிழக்கு பகுதியில் களவாடப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் ஒட்டோவா கிழக்கு பகுதியில் ரக்லிப் விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது.

விமானத்தை களவாடிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேர் ஜார்ஜ் எடய்னி பார்க்கவே பகுதியில் அமைந்துள்ள கனடிய விமான அருங்காட்சியகத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றே, நபர் ஒருவர் களவாடி செலுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது அருகாமையில் இருந்த மற்றும் இரண்டு விமானங்களுக்கும் சேதமடைந்துள்ளதாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தின் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.