Reading Time: < 1 minute

கனடாவில் நான்கு மாதமான நாய்க்குட்டியையும் தங்க நகைகளையும் களவாடிய இரண்டு சந்தேக நபர்களை போலீசார தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

றொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றொரன்டோவின் islington மற்றும் ஹெல்ம்ஹர்ஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ரகசியமாக வீட்டுக்குள் புகுந்து நான்கு மாதமேயான நாய்க்குட்டி ஒன்றையும் வீட்டிலிருந்த சில நகைகளையும் குறித்த நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.