Reading Time: < 1 minute

நேற்று இரவு டூர்ஹம் பிராந்தியத்தில், நெடுஞ்சாலை 407இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

நெடுஞ்சாலையில் Lakeridge வீதிப் பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் இந்த விபத்து நேர்ந்ததாகவும், கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று, நெடுஞ்சாலையின் நடுத் தடுப்பினைக் கடந்து சென்று மேற்கு நோக்கிய தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது நெடுஞ்சாலைத் தடுப்பினைக் கடந்து சென்று மோதுண்ட வாகனத்தில் இருந்த 25 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், காயமடைந்த ஏனையோர் மருத்துவமனைக்கு அனுபபி வைக்கப்பட்டதாகவும், முன்னதாக சம்பவ இடத்திற்கு உலங்குவானூர்தி அழைக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.