Reading Time: < 1 minute

கனடாவில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

ஓராண்டு கால இடைவெளியில் கடந்த ஜூலை மாதம் மளிகைப் பொருட்களின் விலை 8.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த தகவல்களை கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டனவற்றின் விலை உயர்வினால் இவ்வாறு மளிகைப் பொருட்களின் சராசரி விலை உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, பணவீக்க வீதம் கடந்த ஜூலை மாதம் 3.3 வீதமாக பதிவாகியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு முழுவதிலும் பணவீக்க வீதம் சராசரியாக மூன்று வீதமாக காணப்படும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டின் ஜுலை மாதமளவில் பணவீக்கம் 2 வீதமாக வீழ்ச்சியடையும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.