Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் மொனிடோபாவின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டிலிருந்து சுமார் 121 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கைத்துப்பாக்கிகள், சாதாரண துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 வயதான ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.




