Reading Time: < 1 minute

முஸ்கோகா பகுதியில் 1990களில் நான்கு முதியவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த நிலையில், அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Business Directory

இது குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், Joan Lawrence, John Semple, John Crofts, Ralph Grant ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் அவர்களின் சடலங்கள் கூட மீட்கப்படவில்லை என்ற போதிலும், அவர்கள் ஏதோவொரு வகையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

72 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்ட இந்த நால்வரும் 1997ஆம் ஆண்டுக்கும் 1999ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.