Reading Time: < 1 minute

கனடாவில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் ரொறன்ரோவில் பகுதியில் காணாமல் போயிருந்த இரண்டு சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளை இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

கடந்த ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் டிரிப்ட்வுட் மற்றும் ஜேன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த இரண்டு சகோதரிகளும் காணாமல் போயிருந்தனர்.

சிறுமிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் எவ்வாறு காணாமல் போனார்கள் இந்த சம்பவம் ஒரு கடத்தல் சம்பவமா என்பது பற்றிய விபரங்கள் எதனையும் போலீசார் வெளியிடவில்லை.

சிறுமியரின் பாதுகாப்பு கருதி அவர்களுடைய பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.