Reading Time: < 1 minute

கனடாவில் நபர் ஒருவர் ரகசியமாக பெண்களை காணொளியாக பதிவு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் லண்டனின் பகுதியில் குறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காணொளிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளை இவ்வாறு குறித்த நபர் ரகசியமாக படம் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த படங்களை அவதானிக்கும் போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக இந்த காணொளிகளும் படங்களும் எடுக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் பல்வேறு இடங்களில் இந்த நபர் பெண்களை ரகசியமாக காணொளிகளாக பதிவு செய்து கொண்டுள்ளார்.

ஆடை விற்பனை நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இந்த சந்தேக நபர் பெண்களை ரகசியமாக அவர்களுக்கு தெரியாமலேயே படம் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக சட்டவிரோதமான சிறுவர் பாலியல் காட்சிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகு;களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.