Reading Time: < 1 minute

கனடாவில் நியூ பிரவுன்ஸ்வீக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இந்த விபத்து சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார தெரிவிக்கின்றனர்.

நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

வாகன விபத்து காரணமாக குறித்த பகுதியின் அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.

டிராக்டர் ட்ரெய்ல, பாக்ஸ் ட்ரக், மினி வேன் மற்றும் பிக்கப் ட்ரக் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 55 வயதான பெண், ஒருவரும் 54 வயதான ஆண் ஒருவரும் 32 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்து ஏனைய இருவரின் நிலைமை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.