Reading Time: < 1 minute

இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் நாடுகளாக ஆஸ்திரேலியா, கனடாவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நாடு என்ற பெருமையை அமெரிக்கா இழந்துவிட்டது.

Tamil Business Directory

ஒரு நாட்டின் குடிமகன் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை வைத்தே அந்த நாட்டின் கடவுச்சீட்டு எவ்வளவு மதிப்பு மிக்கது என்று கணக்கிடப்படுகிறது.

கடவுச்சீட்டு தரவரிசை
இத்தகைய மதிப்பு மிக்க கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலை தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சிங்கப்பூரில் இருந்து 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இதற்கு அடுத்ததாக ஜெர்மனி , இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து 190 நாடுகளுக்கும் ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து 189 நாடுகளுக்கும் டென்மார்க், பிரிட்டன் நாடுகளில் இருந்து 188 நாடுகளும் கடவுச்சீட்டு தரவரிசையில் உள்ளன.

அதேசமயம் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து 187 நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா, போலாந்து நாடுகளில் இருந்து 186 நாடுகளுக்கும் கனடாவில் இருந்து 185 நாடுகளுக்கும் அமெரிக்காவில் இருந்து 184 நாடுகளுக்கும் விசா இன்றி செல்லலாம்.

கெடுபிடியால் பின் தள்ளப்பட்ட அமெரிக்கா
இந்த கடவுச்சீட்டு தரவரிசை பட்டியலில் 80வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து 57 நாடுகளுக்கு செல்ல விசா தேவை இல்லை.

இந்நிலையில் கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்கு இந்தியர்களின் முக்கிய தேர்வாக இருந்த அமெரிக்கா தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு அந்த இடத்தை ஆஸ்திரேலியாவும் கனடாவும் பிடித்துள்ளன.

மேலும் அமெரிக்கா விசா கொடுப்பதில் தொடர்ந்து கெடுபிடிகளை கடைபிடித்து வருவதால் உயர்கல்விக்காக அமெரிக்காவை நாடிய இந்தியர்கள் தற்போது கனடா மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளை தேர்வு செய்கின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.