Reading Time: < 1 minute

கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

கல்கரியின் ட்ரக் தரிப்பிடமொன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்து விட்டதாகவும் படுகாயமடைந்த மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.