Reading Time: < 1 minute

கனடாவில் தாய் மற்றும் சகோதரரை படுகொலை செய்த 22 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

50 வயதான செர்ரீ புச்சனான் மற்றும் 24 வயதான டேரென் சிஸ்ஹோல்ம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கேவின் சிஸ்ஹோல்ம் என்ற 22 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.