Reading Time: < 1 minute

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் கஞ்சா விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. நகர சபை உறுப்பினர்கள் இந்த தடை நீக்கத்திற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

தடை நீக்கம் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் கடந்த 2018ம் ஆண்டில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதனை தடுக்க இவ்வாறு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பிற்குள் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சில்லறை கடைகளின் ஊடாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.