Reading Time: < 1 minute

ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற பாரிய ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்கான சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Eglinton Avenue West மற்றும் Centennial Park Boulevard பகுதியில் நேற்று இரவு 10:40 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த நிகழ்வின்போது, ஒரு குழுவினர் மோதலில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த கத்திக் குத்து இடம்பெற்றதாகவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பிலோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலோ உடனடியாக மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடாத காவல்துறையினர், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.