Reading Time: < 1 minute
Tamil Business Directory
றொரன்டோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
றொரன்டோவின் Junction Triangle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் சலனமற்ற நிலையில் இருந்த ஆண் ஒருவரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, றொரன்டோ தீயணைப்பு படையினர் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




