Reading Time: < 1 minute

பிராம்டனில் ஒரு மாத காலமாக மாயமானதாக கூறப்படும் இந்திய இளைஞர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

Tamil Business Directory

பிப்ரவரி 23ம் திகதி முதல் 23 வயதான பரஸ் ஜோஷி மாயமாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராம்டனில் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில் சம்பவத்தன்று சுமார் 4.30 மணியளவில் கடைசியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட பரஸ் ஜோஷி சுமார் 143 பவுண்டுகள் எடை கொண்டவர் எனவும், தாடியும் மீசையுடன் காணப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவரது நிலை தொடர்பில் கடந்த பல நாட்களாக எந்த தகவலும் இல்லை என்பதால், குடும்பம் கலக்கத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பரஸ் ஜோஷி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொலிசார் விடுத்துள்ளனர்.