Reading Time: < 1 minute

றொரன்டோவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் 73 வயதான பெண் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சைனாடவுன் ஸ்பெடினா மற்றும் டுன்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதசாரி ஒருவரின் மீது வாகனம் மோதுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், உயிர் காப்பு உதவியாளர்களும் காயமடைந்த பெண்ணுக்கு முதலூதவி வழங்க முயற்சித்துள்ளனர்.

எனினும் வாகனம் மோதுண்டு ஏற்பட்ட காயங்களினால் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

56 வயதான நபர் ஒருவரே வாகனத்தைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினை மேற்கொண்ட நபர் அதே இடத்தில் இருந்து விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.