Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதியொருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
கனடாவின் மார்க்கம் பகுதியின் வீதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தடவைகள் இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மார்க்கமின் 404ம் இலக்க மற்றும் 407ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சாரதிக்கு 30 நாட்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகமே அதி கூடிய வேக கட்டுப்பாடாகும். கடுமையான பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் இவ்வாறு வாகனத்தை செலுத்துவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




