Reading Time: < 1 minute
Tamil Business Directory
எனக்கு உலகில் மிகவும் பிடித்தமானவர்களில் பிரித்தானிய மகாராணியும் ஒருவராவார் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக மிகச் சிறந்த வழியில் சேவையாற்றியுள்ளார் எனஅவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இறுதியாக பிரித்தானிய மகாராணியை சந்தித்த போது அவருடன் பேசிய தருணங்கள் பசுமையான நினைவுகளாய் நீடித்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராணியின் மறைவு குறித்து பிரதமர் ட்ரூடோ அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார்.
மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினத்தில் கனடாவில் விடுமுறை பொது விடுமுறை அறிவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




