Reading Time: < 1 minute
Tamil Business Directory
சூடானிலிருந்து இதுவரையில் சுமார் 375 கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடிய இராணுவ விமானங்கள் மற்றும் நேச நாடுகளின் விமானங்கள் என்பனவற்றின் மூலம் இவ்வாறு கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கனடியர்களை சூடானிலிருந்து மீட்பதற்கு பல்வேறு வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனித ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட கனடியர்கள் தொடர்ந்தும் சூடானில் தங்கியிருப்பதாகவும் அவர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.




