Reading Time: < 1 minute

கனடா அரசு, 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், 18,500க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை அமைதியாக நாட்டைவிட்டு வெளியேற்றியதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 10 மாதங்களில் 18,785 வெளிநாட்டவர்கள் கனடா அரசால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்களில், சுமார் 2,500 பேர் இந்தியர்கள்.

இதுபோக, மேலும் 29,542 பேரை கனடாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளில் கனடா அரசு ஈடுபட்டு வருகிறது.

வெளியேற்றப்பட்டவர்களில் பலர் குற்ற வழக்குகள் தொடர்புடையவர்கள். என்றாலும், அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்கள், அகதிக் கோரிக்கை விதிகளுக்கு இணங்காததால் வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.