Reading Time: < 1 minute

அதிர்ஷ்டத்தில் 10 மில்லியன் டொலரை அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த (41வயது) மைக்கேல் கெப்ரு என்பவரே எத்தியோப்பியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் 10 மில்லியன் டொலர் தொகையை வென்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலையியிலிருந்து விலகி பிறந்த நாடான எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ளார்.

தான் பிறந்த நாட்டுக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதற்காக சென்றதாக அவரது உறவினர் சோசுனா அஸ்ஃபா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் மரணமடைந்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளதாக அஸ்ஃபா கூறியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தங்களுக்கு தகவல் அளித்துள்ளனர் என்றார்.

கெப்ருவின் மறைவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறும் உறவினர்கள் எத்தியோப்பியாவில் உள்ள கனேடிய தூதரகத்திற்கும் இந்த விவகாரம் தொடர்பாக உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் என்ன நடந்தது என்பது தொடர்பாக தங்களுக்கு ஏதும் தெரியாது என கூறும் அஸ்ஃபா, உள்ளூர் பொலிஸாரும் தெளிவான தகவலை தர மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.