Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரைகள் உண்மையான மாத்திரைகள் போன்று பொதியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காலாவதியாகும் திகதி பற்றிய விபரங்கள் வழமைக்கு மாறான அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடரிலக்கம் பொதிகளில் அச்சிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி மருந்து மாத்திரைகள் உண்மையானவை போன்றே தென்பட்டாலும், அவற்றில் சில வேளைகளில் மருந்துப் பொருட்களே அடங்கியிருக்காது என தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான மருந்துப் பொருட்களினால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி மாத்திரைகள் பயன்படுத்தியிருந்தால் உடனடியாக அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறும், அவற்றை வீசி விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.