Reading Time: < 1 minute

ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ஸ்டீல்ஸ் அவன்யூ மற்றும் மிட்லான்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனத் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய எந்தவொரு விபரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடிய சர்த்தியங்கள் தென்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான தகவல்கள் எதுவுமிருந்தால் அதனை பொலிஸாரிடம் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.