Reading Time: < 1 minute

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், ஸ்காபரோவில் வீதியைக் கடக்க முயன்ற சமயம் வாகனத்தினால் மோதுண்டு படுகாயமடைந்த 97 வயது முதியவர் ஒருவர், தற்போது உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த ஆறாம் திகதி காலையில், மக்நிக்கோல் அவனியூவுக்கு வடக்கே, வார்டன் அவனியூ பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற சமயம், 28 வயது ஆண் ஒருவர் தெற்கு நோக்கிச் செலுத்திவந்த ஹொண்டா சிவிக் ரக வாகனம் அவர் மீது மோதியது.

ஆபத்தான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவந்த அவர், சிகிச்சைகள் பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர். அந்தப் பகுதியில் வசிப்போர் அல்லது வேலை செய்வோர், இந்தச் சம்பவம் தொடர்பிலான ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருந்தால் தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.