Reading Time: < 1 minute

இரண்டு இடங்களில் வேலை பார்த்துவந்த கனேடிய பெண் ஒருவர், குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட விரும்பி, ஒரு வேலையை விட்டுவிடுவதென முடிவு செய்துள்ளார்.

Tamil Business Directory

வேலையின் கடைசி நாளில் அடித்த அதிர்ஷ்டம்

New Brunswickஐச் சேர்ந்த Jamie Sullivan, வேலையை விடுவதற்கு முன் ஒரு லொட்டரிச்சீட்டு வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி, 10 டொலர்கள் கொடுத்து ஒரு லொட்டரிச்சீட்டு வாங்கியுள்ளார் அவர்.

Jamie வேலை செய்யும் கடைசி நாள், அவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

அளவிட முடியாத மகிழ்ச்சி

வேலையை விட முடிவு செய்த நேரத்தில் தான் பணக்காரராகிவிட்டதால் Jamieக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. வெகுநாட்களாக ஆசைப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை வாங்கி, தனக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டத்தை நினைவுகூரும் வகையில், அதற்கு லோட்டோ என பெயரிட்டுள்ளார் Jamie.

அத்துடன், வாழ ஒரு சொந்த வீடு, ஓய்வு பெற்ற தன் பெற்றோருக்கு உதவி, பிள்ளைகளுக்கான கல்விக்கு சேமிப்பு என வரிசையாக திட்டங்கள் வைத்திருக்கும் Jamieக்கு, VIP டிக்கெட்கள் வாங்கி தனக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர்கள் சிலரது இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவேண்டும் என்ற ஆசையும் உள்ளதாம்!