Reading Time: < 1 minute

மத்திய ஒன்ராறியோ, முஸ்கோகா பகுதியில் நேற்று முன்தினம் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Upper Raft Lake பகுதியில் கடந்த திங்கட்கிழமை முற்பகல் பத்து மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விமான விபத்து தொடர்பிலான தகவல் அறிந்ததும் இரண்டு தேடி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேவேளை, மேலும் இருவர் உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பரசூட் மூலம் சம்பவ இடத்தில் தரையிறங்கியதாகவும் விமானப்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆறு பேரும் சிகிச்சைகளுக்காக முஸ்கோகா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இநத மீட்பு நடவடிக்கைக்காக விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றும் விமானம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.