Reading Time: < 1 minute

Clarington பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Regional Road 57 மற்றும் Taunton Road பகுதியில், Perry Avenueவில் நேற்று முற்பகல் 10:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வதிவிடம் ஒன்றின் தனிப்பட்ட பாதையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பிக்கப் ரக வாகனம் ஒன்று சிறுவனின் உடலின் கீழ்ப் பாகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

மோசமான காயங்களுக்கு உள்ளான அந்தச் சிறுவன் உடனடியாகவே உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.