Reading Time: < 1 minute

வன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tamil Business Directory

கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் மேற்கு 12ஆவது நிழற்வீதி மற்றும் அல்மா வீதியில் உள்ள பாதாம் பூங்காவில் இரண்டு குழுக்களின் இளைஞர்களிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது.

இதன்போது உயிராபத்தான காயங்களுடன் இச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

வன்கூவர் பொலிஸ்துறைப் புலனாய்வாளர்கள், பாதிக்கப்பட்ட ரெமி மிசுதானி லாவோய் மற்றொரு சிறுவனால் மார்பில் குத்தப்பட்டதாக நம்புகின்றனர்.

இதுதொடர்பாக ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருந்ததாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள படுகொலை துப்பறியும் அதிகாரிகள், இதுதொடர்பாக ஏனெனும் தகவல்கள் தெரிந்தால் தம்மை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.