Reading Time: < 1 minute

வன்கூவர்- டவுன்ரவுண் பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஸ்ட்ராத்கோனா நெய்பர்வுட்- கிழக்கு ஹேஸ்டிங்ஸ் வீதியில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஃபோர்ட் ரக வாகனமொன்றை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி காப்பீடு இல்லாததால் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களையும் காவலில் எடுத்ததாகவும், இதன்போது குறித்த நால்வரிடமும் இருந்து, போதை மருந்துகளையும் பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட வடக்கு வான்கூவரை சேர்ந்த 46 வயதான ஆணும், வான்கூவரைச் சேர்ந்த 18 மற்றும் 17 வயதுடைய இரண்டு பதின்ம வயதினரும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில், வான்கூவரைச் சேர்ந்த 16 வயது சிறுமி வான்கூவரைச் சேர்ந்த 16 வயது சிறுமி,

2019ஆம் ஆண்டில் இதுவரை 150இக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.