Reading Time: < 1 minute

மிரட்டல் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் வகுப்புக்கள் நடைபெறாது என றொரன்டோ தனியார் பாடசாலையொன்று அறிவித்துள்ளது.

Tamil Business Directory

அநாமேதய அடிப்படையிலான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் இந்தப் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

றொரன்டோவின் பிரான்க் சம் ஹால் (Branksome Hall) தனியார் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாக பாடசாலை வளாகம் முடக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ ஆபத்து கிடையாது என பொலிஸார் உறுதி செய்ததன் பின்னர் பாடசாலை மீளவும் திறக்கப்பட்டது.

எனினும் பின்னர் இந்த ஆண்டு முழுவதிலும் வகுப்புக்கள் நடாத்தப்படாது என பெற்றோருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு பாடசாலைக்கு விடுமுறை வழங்க தீர்மானித்ததாக பாடசாலை பேச்சாளர் லிசா ஸ்டிபன்சன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பரீட்சைகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.