Reading Time: < 1 minute

ரொறன்ரோ பெரும்பாகத்தில் (Greater Toronto Area) களவாடப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

களவாடப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1.8 மில்லியன் டொலர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களுக்கு எதிராக 38 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு மற்றும் பீல் பிராந்திய பொலிஸார் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த வாகனங்கள் டுபாய் மற்றும் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.