Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள விசாரணையாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) யோங் வீதி மற்றும் ஜெரார்ட் வீதி பகுதியில் இருந்து படுகாயமடைந்த ஆண் ஒருவரை மீட்டு பொலிஸார்,மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் அவர் காணப்பட்டாலும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக, மேலதிக தகவல்களை திரட்டிவரும் பொலிஸார், இச்சம்பவம் குறித்து பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.




