Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.