Reading Time: < 1 minute

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பணத்தினை கொடுத்தும் நீண்டகாலமாக தனது பயண ஏற்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , பணம் கொடுத்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

Tamil Business Directory

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.