Reading Time: < 1 minute

ஓல்ட் மொன்றியாலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

வியாழனன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 7 என தெரியவந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தொடர்புடைய கட்டிடத்தில் சில பகுதியை இடிக்கும் பணியானது ஞாயிறு பகல் தொடங்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

காணாமல் போனவர்கள் என கூறப்படுவோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இதுவரை அந்த கட்டிடத்திற்குள் நுழையவில்லை.

ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு கட்டிடத்தில் ஒருபகுதி இடிக்கப்படும். தீவிபத்தானது திட்டமிட்ட குற்றச்செயலா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.