Reading Time: < 1 minute
Tamil Business Directory
மேற்கு எட்மண்டனில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, புலனாய்வாளர்கள் விசாரணைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.
156ஆவது வீதி மற்றும் 112ஆவது அவென்யூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மரணத்தின் சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியதா என்பதை தீர்மானிக்க புலனாய்வாளர்கள் தற்போது பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது.
பெரிய தொழில்துறை கட்டடத்திற்கு வெளியே பகுதியளவு மூடிய உடல் பனியில் கிடந்த நிலையில், சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எனினும், இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் விசாரணைகள் அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




